தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படமான வலிமை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும் பிப்ரவரி 24 ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தை தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அந்த படம் குறித்த பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் மகன் வலிமை படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரின் கதாபாத்திரம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. விஜய் சேதுபதியின் மகன் நானும் ரவுடி தான் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது

By ADMIN