இன்றைய சூழலில் பெரும்பாலானோர் தங்களின் மொபைல் போன் வழியாக பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர்.  ஒருவரின் மொபைல் போனிலிருந்து ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கிகணக்கிற்கு பணம் அனுப்ப யுபிஐ அனுமதிக்கிறது.  மொபைலில் உள்ள ஆப்களின் மூலமாக இவ்வாறு பணம் செலுத்த முடியும்.  National payment corporation of India மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இணைந்து இச்சேவையை இலாப நோக்கமின்றி செய்து வருகிறது.
           இந்நிலையில் தடையற்ற பணப்பரிமாற்றதை உறுதி செய்வதற்காக , NPCI ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . பணபரிமாற்றதின்போது ஏற்படும் ஒவ்வொரு தோல்வியடையும் பணத்திற்கு ரூ.100 அபராதம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 1- ம் தேதி , நிதி ஆண்டு நிறைவு என்பதால் பெரும்பாலான வங்கிகளில் யுபிஐ பரிமாற்றம் தோல்வி அடைந்தது . அதில் பலருக்கு தோல்வியுற்ற பணப்பரிமாற்றதிற்கான பணம் திரும்ப பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
          அதற்கு உங்கள் பணம் 24 மணி நேரத்தில் திரும்ப வரவில்லை என்றால் ரூ.100 வங்கி மூலம் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது . அதாவது நாம் யுபிஐ மூலம் அனுப்பிய பணம் தோல்வியடைந்து, அந்த பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு எடுக்கப்பட்ட பணம் திரும்பி 24 மணி நேரத்தில் நம் வங்கி கணக்கிற்கே செலுத்தப்பட்டிருக்கும் .
         அவ்வாறு திரும்ப வராமல் இருந்தால் அந்த வங்கி நமக்கு ரூ 100  அபராதம் செலுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கு தடையற்ற யுபிஐ பணப்பரிமாற்றம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By sowmiya