ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம்
வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக
அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர்
தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு,
மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில்
இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி
இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத்
மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில்
சாகர், இந்தியில் அன்கித் திவாரி என பல
கலைஞர்கள் பாடியுள்ளனர்,
இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்கிவுள்ள மியூசிக்
சிங்கிளை மூன்று மொழி சூப்பர்ஸ்டார்கள்
வெளியிட்டுள்ளனர். அதன்படி தமிழில் பயணி
சிங்கிளை ரஜினிகாந்தும், மலையாளத்தில்
யாத்ராக்காரன் சிங்கிளை மோகன்லாலும்,
தெலுங்கில் சன்சாரி சிங்கிளை அல்லு அர்ஜூனும் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில்
வைரலாகி வருகிறது.