அது, இது, எது, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நம்மை மகிழ வைத்தவர், புகழ்.

அதிலும் குக் வித் கோமாளி சீசன் 2 இவரை, வெள்ளித்திரைக்கு கொண்டு சென்றுவிட்டது. ஆம் இதுவரை 7 படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக அவரே கூறினார்.

தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் புகழ் சில தினங்களுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றனர்.

தான் காதலித்து வந்த பெண்ணை, சில வாரங்களுக்கு முன், தனக்கு நெருங்கிய வட்டாரங்களை மட்டுமே அழைத்து திருமணத்தை நடத்தியுள்ளாராம்.ஆனால் இதற்கு முழுமையாக புகழ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரபல பத்திரிகை நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By ADMIN