விஜய் தொலைக்காட்சியில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் தொடங்கப்பட்டது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆரம்பத்தில் நிகழ்ச்சி குறித்து எந்த ஒரு எண்ணமும் ரசிகர்களிடம் இல்லை.

பின் நிகழ்ச்சி குறித்து முழு விவரம் தெரியவர மக்கள் கொந்தளித்தார்கள். முதல் சீசனுக்கு தான் பிரச்சனை வந்தது, அடுத்தடுத்து 4 சீசன்கள் நடந்து முடிந்துவிட்டது.
ஆரவ், ரித்விகா, முகேன், ஆரி இவர்கள் தான் 4 சீசன்களின் வெற்றியாளர்கள்.

சில ரசிகர்களுக்கு பிக்பாஸ் 5வது சீசன் குறித்த கேள்விகள் உள்ளது, எப்போது தொடங்கும், ஒருவேளை கொரோனா தொற்று அதிகரித்தால் 5வது சீசன் நடக்காத என பல கேள்விகள்.

இந்த நேரத்தில் கொரோனா காரணமாக தான் பிக்பாஸ் 5வது சீசன் குறித்த எந்த பேச்சும் இல்லையாம், ஆனால் பிரபலங்களின் தேடுதல் வேட்டை மட்டும் நடந்து வருகிறதாம்.

எப்போது நிகழ்ச்சி தொடங்கும் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை என கூறப்படுகிறது.

பிக்பாஸ் 5வது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் கமல்ஹாசன் அவர்களும் கொரோனா தொற்று குறையட்டும் பின்பு பார்க்கலாம் என குறிப்பிட்ட நபர்களிடம் கூறியுள்ளார் என்கின்றனர்.

By ADMIN