நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ள நிலையில் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.
காலை 8 மணிக்கு ஆரம்பித்த திருமண நிகழ்ச்சி 10.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
ஆனால், திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரபலங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்கிற பெயரில் பிரபலங்களிடம் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நெட்பிளிக்ஸ் தளத்திற்கு திருமண நிகழ்ச்சியை வியாபாரம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், திருமண நிகழ்ச்சியை யாரும் வீடியோ எடுக்கக் கூடாது என்றும் புகைப்படங்களுக்கும் அனுமதி கடுமையாக மறுக்கப்பட்டு இருக்கிறது.
பாலிவுட் ஸ்டைலில் செக்யூரிட்டி:
எந்தவொரு போட்டோவும் கடுமையான பாதுகாப்பு காரணமாக இதுவரை கசியவில்லை.
பெரிய சொகுசு காரில் வரும் பிரபலங்களை வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தி அவர்களது செல்போன்களை வாங்கிக் கொள்ளும் பவுன்சர்களின் காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த எந்தவொரு பிரம்மாண்டமான திருமணத்திலும் இதுபோன்ற நடைமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் ஸ்டைலில் செக்யூரிட்டியை போட்டுள்ளனர்.
திருமண விழா நடக்கும் இடத்தை சுற்றி 80 பவுசர்கள் குவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்களிடம் கடுமையான சோதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.