முட்டைகோஸில் கூட்டு மற்றும் பொரியல் செய்து சாப்பிடுவதால் செரிமானம் எளிதாகிறது. இவ்வாறு முட்டைகோஸை தினசரி உட்கொள்ளுவதன் மூலம் மலசிக்கல், வயிற்றுப்புண், ஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.
மேலும் இது இதய தசைகளை வலுப்பெற செய்கிறது, இதன் மூலம் இருதய சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
முட்டைகோஸ் உடல் இடையை குறைக்க உதவுகிறது. உடல் இடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, உணவியல் நிபுணர்கள் முட்டைகோஸை பெரிதும் பரிந்துரைக்கிறார்கள்.
தினம்தோறும் முட்டைகோஸ் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் எளிதில் வராது.
மேலும் இது, கண்பார்வை மேம்படுத்தலுக்கு பெரிதும் உதவுகிறது.
ஏதேனும் நோயில் இருந்து மீண்டு வந்தவர்கள், முட்டைகோஸை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களின் உடல்நிலையை விரைவில் மேம்படுத்த உதவும். ஏனெனில், முட்டைகோஸ் உடலில் உள்ள செல்களில் ஆயுள்தன்மை நீடிக்கிறது, நீர்ச்சத்தை அதிகப்படுத்துகிறது, உடல் வலிமைபெறவும் ரத்தத்தை தூய்மை செய்யவும் உதவுகிறது.
உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறியது போலவே, நாம் நோயின்றி வாழ முட்டைகோஸை கூட்டு இல்லை பொரியலாக செய்து நம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வோம்.