பருக உகந்தது, குளிர்ந்த நீரை காட்டிலும் வெதுவெதுப்பான நீரே என்று பொதுவாக பலரும் கூறுவார்.

நாம் தினமும் வெதுவெதுப்பான நீர் அருந்தி வருவதால், செரிமான கோளாறு முதல் முகப்பரு வரை பல பிரச்சனைகளுக்கு தீரும். இத்தகைய நற்பயன்கள் உள்ள இப்பழக்கத்தை அளவாக மேற்கொண்டால் மட்டுமே நல்லது!

அளவுக்கு மீறி வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று பார்ப்போம்!

*இடைவேளை இன்றி வெதுவெதுப்பான நீரை அருந்துவது, உடலின் இயற்கையான செயல்பாட்டை தடுக்கின்றது. எனவே, போதிய இடைவெளியுடன் வெதுவெதுப்பான நீரை அருந்துவதே நல்லது.
*நம் உடல் அதிகமான அளவு வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்வதால் ரத்த அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் ரத்த அழுத்தத்திலும் மற்றும் ரத்த ஓட்டத்திலும் அதிகப்படியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
  *அதிகமான வெதுவெதுப்பான நீரை உட்கொள்ளுவதன் மூலம், உடல் சூடு அதிகரித்து, ஜீரண கோளாறு மற்றும் சில செரிமான பிரச்சனைகளை தூண்டுகிறது.
*அசுத்தங்கள் மற்றும் நச்சுத்தன்மையை எளிதில் கரைக்கின்ற குணம் குளிர்ந்த நீரை விட வெதுவெதுப்பான நீருக்கே  அதிகம் உண்டு. எனவே, அதிகமான அளவில் வெதுவெதுப்பான நீரை பருகுவதன் காரணமாக நம் உடலுக்குள் செல்லும் மாசுபாட்டின் அளவு அதிகரிக்கிறது.

By ADMIN