நம் தமிழ்நாட்டை சேர்த்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடவுள்ளார்.
தினேஷ் கார்த்திக் நிகிதா என்பவரை முதலில் திருமணம் செய்துக் கொண்டார். நிகிதா முரளி விஜய் மீது காதலில் விழ இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டனர். இவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் முதல்தரப் போட்டிகளில் விளையாடும் போது இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருந்தனர்.
ஆனால் அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் நடந்த சம்பவம் இருவருக்கும் மனகசப்பை ஏற்படுத்தி விட்டது. கடந்த 2007ம் ஆண்டு தினேஷ் கார்த்திக், நிகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2012ம் ஆண்டு ஐபிஎல்-5வது சீசனின் போது நிகிதா முரளிவிஜயை சந்தித்திருக்கிறார்.
இவர்களது சந்திப்பு காதலில் முடிய, அதன் மூலம் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த தினேஷ் கார்த்திக் நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டார்.