குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல காரணங்களால் பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.

இந்த நிலையில், நிதிப்பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், அரசு பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிப்பதாகவும், அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்குவதை தடை செய்யும் என்றும் பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் தொடங்கும் 2022 – 2023-ம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்ட இஸ்மாயில், பணக்காரர்களுக்கான வரிகளை அதிகரிப்பதாகவும், கார்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாகவும், அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்க தடை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்கத் தொடங்கி விட்டோம் என்றும் ஆனால் கடினமான முடிவுகளை எடுப்பதில் இது முடிவல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

By ADMIN