இளமையான தோற்றம் யாருக்குத்தான் பிடிக்காது. முக சுருக்கம் நம் வயதை அதிகப்படுத்தி காட்டும், தோற்றத்தையும் மாற்றும். இளமையிலே சில சருமபராமரிப்புகளை செய்துவருவதினால், முகஅழகு மற்றும் இளமை தோற்றம், இவ்விரண்டும் வயதான பிறகும் நீடித்து இருக்கும். முகஅழகை பராமரிக்க இதோ சில குறிப்புகள்.
- ஐஸ் கட்டியால் முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் குளிர்ச்சி அடைந்து முகத்தில் உள்ள தோல் சுருக்கங்கள் விரிகிறது.
- தயிரை முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவதின் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகளும் சுருக்கமும் நீங்கும்.
- தண்ணீருடன் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து 10 நிமிடம் முகத்தில் தடவி ஊற வைத்து பிறகு கழுவவேண்டும். இதன் மூலம் முக பளபளப்பும் சுருக்கமும் நீங்கும்.
- நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காயை உண்பதோடு அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் சரும துளைகள் நீங்க ஆரம்பிக்கும்.
- மேலும் சரும துளைகள் சுருங்க, பேக்கிங் சோடா உடன் சிறிது தண்ணீர் சேர்ந்து பேஸ்ட் போல் சருமத்தில் தடவவும். சரும நிறமும் அதிகரிக்கும்.
- எலும்பிச்சை சாறுடன் சக்கரை சேர்த்து தேய்க வேண்டும். பின்பு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு வாரம் 3 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள மேடுபள்ளங்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.