பொதுவாக லெமன் டி அதிக புத்துணர்ச்சி ஏற்படுத்தும். அனால் பிளாக் டீயில் சில பேர் லெமன் பிழிந்து சாப்பிட்டு முயற்சி செய்திருக்கிறார்கள் அனால் அதன் சுவை சற்று வித்தியாசமாகவும் குடிக்க முடியாமலும் இருக்கும். பின், லெமன் டி மட்டும் தனியாக பருகி வருகிறார்கள். லெமன் டீயின் தனித்துவம் மற்றும் பயன்கள் ஏராளம்.

லெமன் டி செய்யும் முறை மிகவும் எளிது, தண்ணீரை கொதிக்க வைத்து அதில் டி தூளை போட்டு கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, பின் சர்க்கரை அளவோடு அல்லது தேனை சேர்த்து கொண்டால் லெமன் டி ரெடி ஆகி விடும். இது கடினமாக இருக்காது.

சரி, லெமன் டி குடித்தால் நமக்கு இருக்கும் பெரிய பிரச்சினையான உடல் எடை குறையும் .ஏனென்றால் இது உடலுக்குள் சென்று உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி பின்னர் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கி மேம்படுத்தும்.

அது மட்டுமின்றி தினமும் ஒரு டம்ளர் லெமன் டி குடித்தால் அது நமக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் மற்றும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. லெமன் டி உடலுக்கு செரிமானமாகாத உணவை கூட செரிக்க வைக்கிறது. இது உடலை இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை பாதுகாக்கிறது.

லெமன் டி உடன் இஞ்சி சேர்த்தால் உடலில் ஏற்படும் தோற்று நோயை தடுத்து நிதுத்த உதவுகிறது.

 

 

By ADMIN