இந்தியாவில் ஒரு நாளில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் ஒரு லட்சத்துக்கும் கீழாக பதிவாகியுள்ளது.
ஒருநாளில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 75 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் 60,471 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 117,525 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் 2,726 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை 29,570,881 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 28,280,472 பேர் குணமடைந்துள்ளனர். 377,031 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்து இருக்கும் நிலையில், நாடு முழுவதும் 913,378 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,590,044,072 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.