சீனாவில் கடந்த 2019 டிசம்பரில் உருவான கொரோனா உலகம் எல்லாம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது குளிர்காலங்களில் அது குறைந்து விட்டது , கொரோனா தற்போது ஒரு சில வாரங்களாகவே திரும்பவும் ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் இந்த பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.பிரான்சில் வயதானவர்கள் அதிகம் உள்ளதால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்படும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை செய்தனர் .இந்நிலையில், பிரிட்டன்,

தென் ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரோனா பிரான்ஸ் நாட்டின் ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது மிகவியும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . மற்ற கொரோனா வகைகளைவிட இது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த உருமாறிய கொரோனா பிசிஆர் சோதனை கருவிகளில் கண்டறியப்பட முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றே முடிவுகள் வருகிறது . ஆனால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும்.இதனையடுத்து பிரான்சின் தலைநகர் பாரிஸ் உட்பட 15 நகரங்களுக்கு 30 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

By ADMIN