கடந்த மார்ச் 31- ம் தேதி சீனாவில் உள்ள ஜியாங்சு மகாணத்தில் ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மருமகளின் பிறப்பு அடையாளத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார் மணமகனின் தாயார். இவர் நீண்ட வருடங்களுக்கு முன் தொலைந்துப் போன தன் மகள் என்பதை தெரிந்துகொண்டார்.
       பின்பு மணமகளின் பெற்றோரிடம் விசாரித்தபோது , 20 வருடங்களுக்கு சாலையோரத்தில் ஒரு பெண் பிள்ளையை கண்டோம் . ஆதரவின்றி இருந்த குழந்தையை எங்கள் சொந்த குழந்தையைப் போல் வளர்கிறோம் என்று அக்குழந்தை தான் இந்த பெண் என்றும் அவர்கள் தத்தெடுத்த ரகசியத்தைக் கூறியுள்ளனர்.
       இதைக் கேட்ட மணப்பெண் மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மேலும் நான் எப்படி உங்களுக்கு மருமகளாக வரமுடியும் என்று அதிர்ச்சியடைந்தார். ஆனால் மீண்டும் ஒரு சுவாரசிய திருப்பம் ஏற்பட்டது .
        மணமகனாக இருக்கும் தன் மகன் தன்னுடைய சொந்தமகன் அல்ல,என் குழந்தை தொலைந்த பின்பு நான் ஒரு ஆண்பிள்ளையை தத்தெடுத்தேன் அவன் தான் இந்த மணமகன் என்று கூறியுள்ளார் . எனவே இவர்கள் திருமணம் எவ்வித தடையுமின்றி சிறப்பாக நடைபெற்றது.

By sowmiya