நம் இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் அடங்கவில்லை . இந்தியாவின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு உள்ளது. மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் பல நகரங்களில் பெற்றோர்களை இழந்து இருக்கும் குழந்தைகள் தனி மரமாக நிற்கும் சோகம் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து மாநில அரசுகள் கொரோனாவினால் அநாதையான குழந்தைகள் தொடர்பாக திட்டங்களை அறிவித்து வருகின்றன.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த பணத்தின் மூலம்கிடைக்கும் வட்டியை குழந்தையை பராமரிக்கும், வளர்க்கும் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு, அந்த குழந்தையை கவனிக்க வேண்டும் கூறினார்