அஜித் – H.வினோத் கூட்டணியில் பிப்ரவரி 24 இம் தேதி ரிலீஸ் ஆன வலிமை படம் தற்போது ரசிகர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலும் நான்கு நாளில் 100 கோடி வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் அஜித் மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஹெச் வினோத் இயக்கத்தில் , போனி கபூர் தயாரிப்பில் AK61 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்துவருவதாக தெரிகிறது.
குறிப்பிட்ட இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. அவரது கேரட்டோர் என்னவாக இருக்கும் என்று தான் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது
பிக் பாஸுக்கு பிறகு கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அஜித் உடன் அடுத்து நடிப்பதால் கவினின் மார்க்கெட் கிராப் உயருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.