சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வட்டம் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதும் உள்ளது.

மேலும் தனது உடல் பரிசோதனைகாக அண்மையில் ரஜினி சிறப்பு அனுமதியுடன் அமெரிக்கா சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் அவ்வப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரிதான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் நடிகர் ரஜினி தனது அக்காவான அஸ்வத் பானுவுடன் இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்

By ADMIN