விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த இரு தொடரில் இருந்தும் சில காரணங்களால் அவர் பாதியிலேயே விலகினார்.

பின்னர் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி சக போட்டியாளரான பாலாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் FREEZE டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவரது அம்மா கடுமையாக கண்டித்ததை தொடர்ந்து ஷிவானி போட்டிகளில் கவனம் செலுத்தி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார்.சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் ஷிவானி தனது கலக்கலான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது மஞ்சள் நிற புடவையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

By ADMIN