இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 28 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அதை பெரிதாக எந்த நிறுவனங்களும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இப்போது மீண்டும் அதே உத்தரவை தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது உத்தர பிரதேச மாநில அரசு. இதை அனைத்து தனியார் நிறுவனங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

By sowmiya