ஆக்ராவில் வசித்துவருபவர் சோனம்பாண்டே இவருக்கு வயது (25). இவர் இதே ஊரை சேர்ந்த தேவேந்திர குமார் என்பவரை ரொம்ப நாட்களாகக் காதலித்து வந்தாக தெரிகிறது

சோனம் பாண்டே பிரபல மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார் இவர் இந்த மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு ஆய்வகத்தில் தேவேந்திரகுமார் பணியாற்றி வந்ததால் இருவரும் அடிக்கடி பார்த்து பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் தேவேந்திரகுமார் சோனத்தைத் கல்யாணம் செய்துகொள்வதாகக் கூறி வந்தார் ஆனால் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

இதனை கேள்வி பட்டு கோபமடைந்த சோனம் தன் காதலனை அவர் வீட்டிற்கு வரச்சொல்லி அவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.

இதனால் பலத்தை காயமடைந்த அவர் சத்தமிட்டுத் துடித்துக் கீழே சரிந்து விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் சோனத்தைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

By ADMIN