பிரபல இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இறுதியாக இயக்கிய தர்பார் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவியது. முன்னணி நடிகர்களின் இரண்டுப் படங்களுமே அடுத்தடுத்து தொடர்  தோல்வியை சந்தித்ததால், இயக்குனர் A.R.முருகதாஸின் படத்தில் நடிக்க பல நடிகர்களும் தயங்குகிறார்கள்.
            என்னதான் அவர் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இந்த இரண்டு ப் படங்களின் தோல்வி அவருக்கு கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம். எனவே அடுத்த படத்தை கண்டிப்பாக வெற்றிப் படமாக வேண்டும் என்பதில் இயக்குனர் A.R முருகதாஸ் தீவிரமாக உள்ளார்.
            இந்நிலையில் அவர் Disney plus hotstar-ல் அனிமேஷன் படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்திற்காக பல ஹீரோக்களை அணுகி யுள்ளார் . ஆனால் அனைவரும் மறுத்துள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த இயக்குனர், ஏற்கனவே கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய படங்களை நடிகர் சூர்யாவை வைத்து இயக்கியிருந்தார். தற்போது அவர் இயக்கவிருக்கும் அனிமேஷன் படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க உள்ளராம். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

By sowmiya