தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 6)காலை 7 மணி முதல் பரப்பரப்பாக நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று காத்திருந்தனர். தி .மு .க தலைவர் மு .க .ஸ்டாலின் ,துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் , மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகிய அரசியல் தலைவர்களும் நடிகர்கள் ரஜினி,அஜித்,சூர்யா,கார்த்தி சிவக்குமார்,சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் வாக்களிப்பதற்காக சென்னனை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சுமார் 500மீட்டர் தூரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்தனர். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென்று உணர்த்துவதற்காக இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.ஆனால் பெட்ரோல் விலையின் ஏற்றத்தை சுட்டிக்காட்டவே விஜய் சைக்கிளில் சென்றாரென்று இணையத்தில் மீம்ஸ் போட்டு வருகிறார்கள் .
மேலும் நடிகர் விஜய் வாக்களித்துவிட்டு வீடு திரும்பும் போது ரசிகர்கள் கூட்டம் குவிந்ததால் அவரது கார் டிரைவரை வரவழைத்து சைக்கிளைக் கொடுத்துவிட்டு ,விஜய் வேறு ஒருவரின் ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.