தளபதி விஜய் படம் என்றாலே அந்த படத்தின் ஹீரோயின் வாய்ப்பை தட்டிப்  பறித்துவிட வேண்டுமன அனைத்து நடிகைகளும் ஆர்வம்  காட்டுவர் .ஆனால் தற்போது விஜய் படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

முன்னணி நடிகையான நயன்தாராவுக்கே விஜய் படங்களில் முக்கியத்துவம் இல்லை என்பதால்,மற்ற நடிகைகளும் விஜய் படத்தில் நடிக்க தயங்குகிறார்கள். அதிலும் செகண்ட் ஹீரோயின் வேடம் என்றால் சொல்லவே தேவையில்லை ,ஓரிரு காட்சிகளில் மட்டுமே தலைகாட்ட வேண்டிய சூழ்நிலை வந்துவிடும் என அஞ்சிகிறார்கள்

தற்போது விஜய் நடித்துவரும் தளபதி 65 படத்தில்,இரண்டாவது நாயகி வேடம் என்று சில இளவட்ட நடிகைகளை அணுகியுள்ளனர் .ஆனால் அந்த நடிகைகளோ விஷயமறிந்து இருக்கிற மார்க்கெட்டையும்  கெடுத்து  கொள்ள கூடாது என்றெண்ணி ஓட்டம் பிடித்துள்ளனர்.இதையறிந்த விஜய் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

By sowmiya