கடந்த சில நாட்களாகவே சமந்தா நாக சைதன்யா விவாகரத்து தகவல் அடிக்கடி இணையத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. இதனிடையே, நானும் நாகசைன்யாவும் பிரிவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். இதற்கு நாகர்ஜூனா இவர்களின் பிரிவுக்கு வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், 200 கோடி ஜூவனாம்சம் கொடுத்தும் சமந்தா, நாக சைத்தன்யாவின் குடும்பத்திடம் இருந்து ஒரு ரூபாய் கூட தனக்கு வேண்டாம் என்றும், தனது கடின முயற்சியின் மூலம் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்ததாலும், தன்னால் சுயமாக வாழ முடியும் என சமந்தா அந்த 200 கோடி ரூபாய் தொகையை ஏற்க மறுத்ததற்காக காரணமாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது.

மேலும், இவர்களின் பிர்வுக்கு முக்கிய காரணமாக சமந்தா வெப் சீரியஸும், குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததுமே காரணம் என கூறப்படுகிறது. இதனிடையே, இன்னும் 5 தினங்களில் தங்களின் 4வது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில், 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையை தற்போது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முறித்துக் கொள்வதாக நாக சைதன்யா, சமந்தா இருவருமே கூறியிருக்கும் தகவல் ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திக்கிறது.

சமந்தாவும், தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது, samanthaRuthPrabhu என்ற பெயரை பதிவிட்டுள்ளார். தற்போது ட்விட்டர் பக்கத்திலும், சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

By ADMIN