தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்கள் தேர்வு செய்வது நடிகர் பிரகாஷ் ராஜ் தான். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு இணையான சம்பளத்தோடு நடித்து வருகிறார்.

கடந்த 1994ல் லலிதா என்பவரை திருமணம் செய்த பிரகாஷ் ராஜ் சில காரணங்களால் 2009ல் விவாகரத்து பெற்று பிரிந்தார். பின் அடுத்த ஆண்டே போனி வர்மா என்பவரை திருமணம் செய்தார். தற்போது திருமணமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை கொண்டாடியுள்ளார்.

குழந்தைகள் முன்னிலையில், மீண்டும் திருமணம் செய்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். என் மகனுக்காக திரும்பவும் திருமணம் செய்து கொண்டோம் என்ரு கூறி டிவிட்டர் பதிவில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார்.

By ADMIN