இந்திய அணியின் பேட்டிங்கில் 4 சீனியர்கள், பவுலிங்கில் ஒரு முக்கிய வீரர் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணியில் இருந்து ஒவ்வொரு வீரர்களாக அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதே போல துணைக்கேப்டன் கே.எல்.ராகுலும் காயம் காரணமாக வெளியேறினார்.

இதனையெல்லாம் விட பெரும் ஷாக்காக அமைந்தது இன்று காலை வெளியான அறிவிப்பு தான். சூப்பர் ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ்-ம் காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

தீபக் சஹாரின் முக்கிய விக்கெட்கள் பெரும் பங்காற்றின. 3 போட்டிகளிலுமே சூர்யகுமார் யாதவ் 34* (18), 8, 65 (31) என அசத்தியிருந்தார்.

உலகக்கோப்பை தொடருக்கு தேவையான ஒவ்வொரு வீரரையும் தற்போதே தேர்ந்தெடுத்து அதிகப்படியான போட்டிகளில் ஆட வைத்து தயார் படுத்த வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு அதிக போட்டிகளில் ஆடினாலும் அவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை இரண்டுமே சரியாகவே இருக்க வேண்டும். இது மிகப்பெரிய சவால் ஆகும்.

தற்போதைய சூழ்நிலைகளை வைத்து பார்த்தால் ரோகித் சர்மா ஒரு இளம் படையுடன் டி20 உலகக்கோப்பையை எதிர்கொள்ள திட்டமிடுகிறார் என்று தான் தெரிகிறது.

By ADMIN