பீகாரில் நகரில் பஸ்தாரில் ஒரு மர்மம் நிறைந்த ஒன்று கோயில் உள்ளது. அங்கு என்ன மர்மம் இருக்கிறது என கேட்கிறீர்களா? இந்த கோவிலுக்குள் தினமும் இரவும் யாரோ பேசும் சத்தம்
கோவில் பக்கத்தில் உள்ள வீடுகளில் கேட்கிறது
இந்த கோவிலை பக்கத்தில் உள்ள மக்கள் இந்த ஒலிகள் கோவிலில் உள்ள தெய்வங்கள் ஒன்றுக்கொன்று பேசும் சத்தங்கள் என்று கூறுகின்றனர். இப்பொது வரை இந்த கோவிலுக்குள் இரவில் நேரங்களில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
பீகாரில் உள்ள ராஜராஜேஸ்வரி திரிபுரா சுந்தரி தேவியின் கோயில் உள்ளது , இந்த மர்மம் நிறைந்த கோவில், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பவானி மிஸ்ரா என்ற தாந்த்ரீகர் திரிபுரசுந்தரி தேவியின் சன்னதியையும் பிற தேவிகளின் சன்னதியையும் கட்ட இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.
ஆடு கூட செல்பி எடுத்த இளம் பெண்ணை தலையில் முட்டி தூக்கும் ஆடு வீடியோ இணையத்தில் வைரல்
வேத மற்றும் தாந்திரீக நடை முறைகளை பயன்படுத்தி இந்த கோவிலில் உள்ள தெய்வங்களை வணங்குவது இந்த கோவிலில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. தாந்திரீகம் செய்பவர்களுக்கு இந்த சன்னதியின் பக்தியில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
இந்த சன்னதியின் முதன்மை தெய்வம் லலிதா திரிபுரசுந்தரி என்றாலும் காளி, தாரா, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, தூமாவதி, மாதங்கி மற்றும் கமலா ஆகியோரின் படங்கள் மற்றும் படுக் பைரவர், தத்தாத்திரேயர் மற்றும் பிற தெய்வங்கள் உள்ளன.
பீகாரில் உள்ள ராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரியின் கோயில் மற்ற கோயில்களில் இருந்து மிகவும் வித்தியாசப்பட ஒரே காரணம் கோயிலுக்குள் இருக்கும் தெய்வங்கள் மனிதர்களைப் போலவே இரவில் பேசுகின்றன
இரவில் தரிசனத்திற்காக கோவில் மூடப்படும் போது பலரும் அனுபவித்த அதிர்ச்சியூட்டும் உண்மை இது. தெய்வங்கள் ஒருவருக்கு ஒருவர் உரையாடுவது போல கோயில் சுவர்கள் வழியாக சத்தம் வருவதை பலர் கேட்டிருக்கிறார்கள்.
இந்த தகவலின் உண்மையை அறிய விஞ்ஞானிகள் குழு இரவில் கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள். இரவில் உன்னிப்பாக கேட்கும்பொழுது வார்த்தைகள் கோவில் சுவர்களுக்குள் எதிரொலிக்கின்றன என்று முடிவு செய்தனர்.
ஆனால் எதனால் பிரதான கோவிலுக்குள் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன என்று தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இருப்பினும் அந்தக் குரல் வெளியில் இருந்து வரவில்லை கோவிலில் உள் இருந்துதான் வந்தது என்பதில் விஞ்ஞானிகள் உறுதியாக இருக்கின்றனர்.
இந்த கோவிலில் உள்ள சிலைகள் இரவில் ஒருவருக்கு ஒருவர் பேசுவதை பக்தர்கள் அதிக அளவில் நம்புவதால் இந்த கோவில் தொடர்ந்து பிரபலமாகி கொண்டு வருகிறது. தொடர்ந்து இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து செல்கிறார்கள்.