மம்தா பானர்ஜி, இன்று உடைந்த காலுடன் வீல் சேரில் அமர்ந்தபடி பிரசாரத்தை மீண்டும் தொடங்கினார்.

ஒரு சிறு விபத்தை பெரிய சம்பவம்போல் வெளிக்காட்டி, அனுதாபத்தை வெளிப்படுத்தி மம்தா ஓட்டுகளை வாங்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு  தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜியை சிலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.

இது திட்டமிட்ட சதி என்றும் சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன் என்றும் மருத்துமனையில் இருந்தபடி காலில் கட்டுப் போட்ட நிலையில் உருக்கமுடன் தெரிவித்தார் மம்தா.

By venkat