தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து அவரது 69வது படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல் வேலைகளில் பணியாற்றவிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் வேலைகளில் மும்முரமாக இருக்கும் விஜய், கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருக்கிறார். தற்போது இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், விஜய் வாக்கு சாவடி மையத்திற்கு எப்போது வருவார் என்று தமிழகம் முழுவதும் எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஜய், விமான நிலையத்தில் இருந்து நீலாங்கரையில் இருக்கும் வீட்டிற்கு வருவார் என்று எதிர்ப்பார்த்தனர். நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய், நீலாங்கரை வாக்கு சாவடிக்கு வெள்ளை சட்டையணிந்து, காரில் சென்று தன்னுடைய ஓட்டினை போட்டிருக்கிறார்.

அதுவும் கையில் காயம் ஏற்பட்டு மருத்துவ டேப் போட்டு ஓட்டினை செலுத்தி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தளபதிக்கு என்ன ஆச்சு என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள். படப்பிடிப்பில் ஸ்டெண்ட் காட்சியில் போது சிறு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் இணையத்தில் கசிந்துள்ளது.

By ADMIN