தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இன்று வெளியான சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், கீர்த்தி சுரேஷின் நடிப்பும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷுக்கு எப்போது திருமணம் யாருடன் திருமணம் என்ற கேள்விகளும் வதந்தி செய்திகளும் இணையத்தில் விவாதபொருளாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அது என்னவென்றால், கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறார் என்றும் அவர் அவரின் நீண்ட நாள் நண்பர் என்றும் கூறப்படுகிறது. அவருக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் விரைவில் திருமணம் என்றும் கேரளாவில் பல்வேறு நகைக்கடைக்கு சொந்தக்காரர் மகன் தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் குறித்த உண்மையான தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By ADMIN