குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் லேட்டாக உள்ளே வந்தாலும், லேட்டஸ்ட்டாக பல டிஷுகளை செய்து அசத்துவார் என, எதிர்பார்க்கப்பட்ட சீரியல் நடிகை ரித்திகா இரண்டே வாரத்தில் வெளியேறினார்.
இந்த நிலையில் ரித்திகா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள், அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து அவருக்கு என்ன ஆனது என, ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
தனக்கு ஃபுட் பாயிஸான் ஆகி விட்டதாகவும், மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்த பின்னர் உடல்நிலை நலமாக இருப்பதாக கூறியுள்ளார். அதே போல், தன்னை நலம் விசாரித்த ரசிகர்கள் அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்….