தமிழ் திரையுலகில் பல பாடல்களை எழுதி பிரபலமானவர் கவிஞர் சினேகன்.

ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இவருக்கு மிகப்பெரிய பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது.
இந்நிலையில் கவிஞர் சினேகனுக்கு பிரபல நடிகையுடன், வரும் ஜூலை 29ஆம் தேதி திருமணம் என்று முடிவாகியுள்ளது.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை, இளம் நடிகை கன்னிகா தான். இவர் முதன் முதலில் அமுதா எனும் சீரியல் மூலம் நடிக்க துவங்கினார்.

பின்னர், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை படத்திலும், திருமுருகன் இயக்கி நடித்த கல்யாண வீடு சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By ADMIN