எப்போதும் வீட்டில் அசைவ உணவு சமைத்தால் எல்லோரும் விரும்பி உண்பார்கள்.
ஈரலில் பல வைட்டமின்களும் பல வெறு சக்திகளும் உள்ளது. தற்போது இருப்பவர்களில் பெரும்பாலானோர் சாப்பிடுவது கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரல் தான்.

இவற்றில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருந்தாலும் இதை ஒரு சிலர் கோழி ஈரல் தான் நன்மை ஆட்டு ஈரல் தான் நன்மை என கூறுவார்கள். இதில் எது உடலுக்கு மிகவும் நன்மை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோழி ஈரல் vs ஆட்டு ஈரல்
இதில் 100 கிராம் மட்டன் ஈரல் மற்றும் சிக்கன் ஈரலில் சுமார் 160-170 கலோரிகளும், 20-25 கிராம் புரோட்டீனும், 5 கிராம் கொழுப்பும் உள்ளது. இவை இரண்டில் மட்டன், சிக்கன் என இரண்டிலும் 400-500 மிகி கொலஸ்டரால் உள்ளது.

வைட்டமின் பி12 மட்டன் ஈரலில் 85 மிகி/100கி, சிக்கன் ஈரலில் 16 மிகி/100கி உள்ளது. இந்த இரண்டு ஈரலிலும் ஒரு நாளைய்க்கு தேவையான வைட்டமின் ஏ சத்து 00 கிராம் மட்டன் ஈரலில் 6000 யூனிட்டும் சிக்கன் ஈரலில் சுமார் 16000 யூனிட் வைட்டமின் ஏவும் உள்ளது.
இதில் சிக்கன் ஈரலில் தான் அதிகளவான வைட்டமின் ஏ சத்து உள்ளது. இது உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

ஒருவருக்கு அளவிற்கு அதிகமாக வைட்டமின் ஏ சத்து உடலுக்கு கிடைய்க்கும் போது அது ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ என்று சொல்லக்கூடிய மூளை தொடர்பான பாதிப்புகள் அல்லது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இவற்றை இரண்டு ஈரலுக்குமான முக்கிய வித்தியாசங்களாக சொல்லலாம். ஆனால் மட்டன் ஈரல், சிக்கன் ஈரல் என இரண்டுமே நல்லது தான்.
ஆனால் மட்டன் ஈரலை விட சிக்கன் ஈரலில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், சிக்கன் ஈரலை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஒருவர் ஒரு வாரத்திற்கு ஒரளவிற்கு பெரியவராக இருந்தால் 100-200 கிராம் மட்டன் அல்லது சிக்கன் ஈரலை சாப்பிடலாம்.
குழந்தைகள் சுமார் 50 கிராம் சாப்பிடலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் மூன்று மாதங்களில் வாரம் ஒரு முறை மட்டன் ஈரலை, அதுவும் 50 கிராமிற்கு மேல் எடுக்க கூடாது.

By ADMIN