பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா. இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளான அவர் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார்.

இதற்கிடையில் வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு 3 மாதத்திலேயே விவாகரத்தும் பெற்றார். மேலும் அதனால் அவர் பல சர்ச்சைகளை சந்தித்தார். அப்பொழுது வனிதாவுக்கும், லட்சுமிராமகிருஷ்ணனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது . இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வனிதாவும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் பிக்கப் டிராப் படத்திற்காக திருமண கோலத்தில், நெருக்கமாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கருத்து கேட்டுள்ளார். அதற்கு அவர் நகைச்சுவையாக உள்ளது. ஆனால் தயவுசெய்து எனக்கு டேக் செய்ய வேண்டாம். நன்கு சிரித்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.
அந்த பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் வனிதா, அருவருப்பான விஷப்பெண்மணி லட்சுமி ராமகிருஷ்ணன் எனது ரகசிய அபிமானியாகவும், தீவிர ரசிகையாகவும் மாறிவிட்டார். அவர் மிகவும் துல்லியமாக என்னை பின்தொடர்கிறார். ஒரு காமெடி கதை அனைவரும் நன்கு சிரிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. பவர் ஸ்டார் நாம் வென்றுவிட்டோம் என கூறியுள்ளார்.

By ADMIN