தெறி, ராஜா ராணி,மெர்சல் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லி.

பிரபல இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லிக்கு, அறிமுக படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

மற்ற படங்களை காப்பி அடித்து படம் எடுக்கிறார் என்ற விமர்சனம் இருந்தாலும் அட்லியின் இயக்கும் திறனுக்கு கட்டாயம் சல்யூட் அடிக்க வேண்டும், அந்தளவுக்கு ரசிகர்களுக்கு ஏற்றபடி நேர்த்தியான படங்களை எடுக்கிறார்.

இவருக்கும், இவருடைய காதலியான பிரியாவுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா, நேற்று வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில், எங்களுடைய குழந்தைக்கு 5 வயதாகிறது, அழகான தேவதை, எங்களுக்கு எல்லாமே அவள் தான், அம்மாவும், அப்பாவும் உன்னை அதிகம் நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

By ADMIN