உலகில் மனித உடலை சார்ந்து வாழும் ஏராளமான ஒட்டுண்ணிகள் உள்ளன. அதில் உருளைப்புழுக்கள், நாடாப்புழுக்கள், ஊசிப்புழக்கள், கொக்கிப்புழுக்கள் போன்றவை மனிதனின் குடலில் வாழும் ஒட்டுண்ணி புழுக்களாகும். ஒவ்வொரு புழுக்களும் பல வடிவங்களில், அளவுகளில் இருக்கும். ஒட்டுண்ணிகளான புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும். நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன.
இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு அழிக்க ஆரம்பிக்கும்.
அந்தவகையில் இதனை எப்படி இயற்கைமுறையில் அழிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
- வெதுவெதுப்பான பாலில், ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த பப்பாளி காயின் விழுது மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஒரு வாரம் தொடர்ந்து காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருந்து புழுக்கள் வெளியேறிவிடும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த பூசணி விதையில் அரை கப் நீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் பின்பற்றினால் நல்ல பலன் கிட்டும்.
- சிறிது வேப்பிலையை அரைத்து விழுது போன்று செய்து கொள்ளவும். பிள் ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் வேப்பிலை விழுதை சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், உடலில் இருந்து புழுக்கள் வெளியேறிவிடும்.
- நற்பதமான பூண்டு பல்லை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது பூண்டு டீ தயாரித்து வெறும் வயிற்றில் ஒரு வாரத்திற்கு குடித்தும் வரலாம்.
- காலை உணவில் ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். பின் 3 மணிநேரம் கழித்து, 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு வாரத்திற்கு குடித்தால், அனைத்து வகையான குடல் புழுக்களும் உடலில் இருந்து வெளியேறிவிடும்.
- 2-3 கிராம்புகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை என ஒரு வாரம் குடித்து வர வேண்டும்.
- உடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற நினைத்தால், ஒரு வாரத்திற்கு தினமும் கேரட்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
- ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து, 1/2 டீஸ்பூன் ஓம விதைகளை நீரில் போட்டு குடியுங்கள். இப்படி தினமும் ஒரு முறை என 2 வாரத்திற்கு மேற்கொள்ள வேண்டும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொண்டு குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.