கேரள அரசின் பேருந்துகள் அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. அந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அவர்களது செல்போன்களில் சத்தமாக பேசுறது , அதிக சௌண்டுடன் பாடல்கள் வைத்து கேட்பதும் மற்ற பயணிகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இப்படி இருக்க கேரள போக்குவரத்து கழகம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பேருந்துகளில் சத்தமாக பேசுவது, பாடல் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்

By ADMIN