நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும், நாம் சாப்பிடும் பொருளில் பல நன்மைகள் நிறைந்துள்ளன. அது பலவிதமான நோய்களை குணாமாகுவதோடு, அந்நோய் நம்மை அண்டாமல் தடுக்கிறது.
வெங்காயம்
கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
தசைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும்.
மாதவிலக்கை சீராக்கும்.
சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்கும்.
ரத்தசோகையைக் குணமாக்கும்.
வறண்ட தொண்டை , இருமலைச் சரிசெய்யும்.
எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்சனையைத் தடுக்கும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
பிஸ்தா 
100கிராம் பிஸ்தாவில் 550 கலோரி ஆற்றல் இருக்கிறது.
நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.
பிட்டாகரோட்டின் , வைட்டமின் இ போன்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.
பிஸ்தா எண்ணெய் , சருமத்தைப் பொலிவாக்கும்.
பிஸ்தா சாப்பிட்டுவந்தால் , நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
தயமின் ,  இரும்புச் சத்து நிறைந்துள்ளன.
துத்தநாகம்
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு அவசியமானது. நூற்றுக்கும் மேற்பட்ட என்சைம்களைத் தூண்டுகிறது.
சீரான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் அவசியமானது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுகிறது.
இதயம் , கல்லீரல் , செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு அவசியம்.
ஒரு நாளைக்கு ஆணுக்கு 11 மிகி , பெண்ணுக்கு 8 மிகி தேவை.
இறைச்சி , கீரை , காளான் , பயறு வகைகள் , மீன் உள்ளிட கடல் உணவுகள் , பால் பொருட்களில் நிறைவாக உள்ளது.
எலுமிச்சை
வைட்டமின் சி நிறைந்தது.
வாந்தி உணர்வைப் போக்கும்.
சருமத்தைப் பொலிவாக்கும்.
பொட்டாசியம் சத்து அதிகம் கிடைக்கும்.
சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு சிறந்த நிவாரணி.
கால்சியம் சத்து இருப்பதால் , எலும்புகளுக்கு நல்லது.
இதய நோய்களைத் தடுக்கும்.

By sowmiya