சினிமாவில் அதி வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கமல்லின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக் இருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்,
இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
இந்த படத்தை கமலுடன் இணைந்து சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்து கமல் ஹாசன் டிவிட்டரில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
சில வேலைகள் சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும்.@sonypicsfilmsin & @RKFI இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி @Siva_Kartikeyan, இயக்குனர் @Rajkumar_KP போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி.இருவருக்கும் வாழ்த்துக்கள்(1/2) pic.twitter.com/DSuGi6lXa6
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2022