தலையில் உண்டாகும் சிறு வலி அல்லது நீடித்த வலி எதுவாக இருந்தாலும், தலைவலி ஏற்பட்டால் நமது வழக்கமான செயல்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

சம அளவு இஞ்சிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது தலைவலியைக் குறைக்கும்.

இலவங்கப் பட்டையைப் பொடி செய்து நீர் கலந்து நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.

கிராம்புப் பொடியை முகர்ந்தால் சுறுங்கி இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து தலைவலி சரியாகும்.

தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு தூங்குவதே மருத்துவம்.

தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாக சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதே அதற்கு மருத்துவம்.

தலையின் பின் பகுதியில் வலி இருந்தால் அதற்கு மன உளைச்சலே காரணம்.

ஆகையால் ஏதற்கெடுத்தாலும் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுங்கள்.

By sowmiya