பெண்களை போன்றே ஆண்களும் மலட்டு தன்மை பிரச்சினையால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதற்கு காரணங்களாக உணவு, உடை, வாழ்க்கை முறை, மதுப்பழக்கம், புகைப்பழக்கம், கதிர்வீச்சு என்று பலவற்றை ஆதாரங்களோடு அடுக்கினாலும் இதில் தரம் குறைந்த ஊட்டசத்தும் கூட அதிக காரணமாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி சில உணவுகள் கூட இந்த பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைகின்றது. தற்போது அவை என்னெ்னன என்பதை தெரிந்து கொள்வோம்.
பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளை இனி தொடாதீர்கள்.
இதை உட்கொள்வதால் விறைப்பு செயல்பிறழ்ச்சி என்பதன் மூலம் உங்கள் தொந்தரவு ஏற்படும்.
ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் உங்கள் தமனிகள் அடைபடாமல் இருக்க வேண்டுமானால் அதனை நீங்கள் தவிர்ப்பதே நல்லதே.
ஏதோ ஒரு வகையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால், விறைப்பு செயல்பிறழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சில பாஸ்ட் ஃபுட்களில் அதிகமான கொழுப்புகளும், கலோரிகளும் உள்ளது.
இது உங்கள் தமனிகளை அடைக்கும். இவையிரண்டுமே விறைப்பு செயல்பிறழ்ச்சி ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.
இவ்வகையான உணவுகள் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும். மலட்டுத்தன்மையை உண்டாக்கும் உணவுகளில் ஒன்றான மாட்டிறைச்சியை தவிர்க்கவும். பால் பொருட்களிலும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கியிருப்பதால், அதனை உட்கொள்ளும் அளவையும் குறைத்துக் கொள்ளவும்.
மலட்டுத்தன்மையை உண்டாக்கும் உணவுகளில் ஒன்றான பால் பொருட்களை தவிர்க்கவும். அளவுக்கு அதிகமாக ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் உங்கள் விறைப்பின் இறுக்கத்தை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அப்படி தெரிந்தால், நீங்கள் உட்கொள்ளும் அளவை கண்டிப்பாக குறைத்துக் கொள்வீர்கள். ரிஃபைன்ட் சர்க்கரை கொண்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
ரிஃபைன்ட் சர்க்கரையை அதிகமாக கொண்டுள்ள உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுவதில் சிரமம் ஏற்படும். சோடியம் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
அதற்கு அளவுக்கு அதிகமாக உப்பு இருக்கும் பண்டங்களை தவிர்க்கவும். சிப்ஸ் முதல் உப்பு அதிகமாக இருக்கும் இதர உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
முட்டைகள், சீஸ், வெண்ணெய் மற்றும் இதர உணவுகளால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஆகவே அவைகளை தவிர்க்கவும். ஏனெனில் இவ்வகை உணவுகள் விறைப்பு செயல் பிறழ்ச்சியை ஏற்படுத்தும்.
உறைந்த உணவுகளையும் குறைக்க வேண்டும். ஏனென்றால் இது உங்கள் விறைப்பையை ஓரளவிற்கு பாதிக்கும். உறைந்த உணவுகளுக்கு பதில் சாலட் போன்ற உணவுகளை உண்ணுங்கள்.
டப்பாவில் அடைத்த உணவுகள் உங்கள் ஆரோக்கியமான தம்பத்திய வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்றால் டப்பாவில் அடைத்த உணவுகளை தவிர்க்கவும். ஆல்கஹால் விறைப்பு செயல்பிறழ்ச்சி உண்டாக்குவதில் இதுவும் முக்கிய பங்கை கொண்டுள்ளது.
ஒன்று குடி பழக்கத்தை நிறுத்துங்கள் அல்லது குடிக்கும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.