ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகர் சந்தானத்தின் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா.

சினிமாவிலும், சீரியல்களிலும் நடித்து வந்த மதுமிதா பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

அப்போது பிக் பாஸ் வீட்டினுள் மற்ற போட்டியாளர்கள் சிலருடன் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து கையை பிளேடால் அறுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது நினைவிருக்கலாம்.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து சில நாட்கள் மீடியாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் சமீபத்தில்தான் திரும்பவும் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த அனபெல் சேதுபதி படத்தில் நடித்திருந்தார். மதுவுக்கும் அவரின் உறவினர் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர் எனத் தெரிவித்திருக்கின்றனர். வாழ்த்துகள் மதுமிதா – மோசஸ் ஜோயல்.

By ADMIN