இன்றைய சூழலில் பெண்கள் தனது அழகை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகிறார்கள். அதற்காக பல க்ரீம்களையும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இயற்கையாகவே பல வழிகளில் முகப்பொலிவையும் ,சருமத்தையும் பெற முடியும்.
பப்பாளி பழத்தால் சிகப்பழகைப் பெற முடியுமென்பதை நம்பமுடிகிறதா? ஆம் கண்டிப்பாக முடியும் . அது எப்படி பயன்படுத்துவது மற்றும் அதனால் என்னென்ன பயன்கள் என்பதை இந்தப் பதிவில் பார்த்துப் பயன் பெறுங்கள்.
பப்பாளியை எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு டம்ளர் தண்ணீரில் அரைத்த பப்பாளி சாறை ஊற்றவும் பிறகு அதனுடன் தேன் சேர்த்து ice cube tray ல் ஊற்றி வைக்க வேண்டும்.ஐஸ் கட்டியான பிறகு அதனை பயன்படுத்தவும்.
பயன்கள் :
1. pigmentation ஐ சரிசெய்து முகத்தை சிகப்பழகாக வைத்து கொள்ள உதவுகிறது.
2. முகத்தில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் நீக்க உதவுகிறது.
3. முகத்தை மிருதுவாக மற்றும் பளபளப்பாகவும் வைத்து கொள்ளும்.
4. முகப்பரு தழும்புகள் மறைய மற்றும் கரும்புள்ளி நீங்க பெரிதும் உதவுகிறது.
5. முகச்சுருக்கம் நீங்கி முகம் இளமையாக இருக்கும் .