விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் பொது வெளியில் அதிகமாக வருவதில்லை . இதனால் தமிழக சட்டசபை தேர்தலிலும் விஜயகாந்த் போட்டியிடவில்லை.
தற்போது மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணிக்கு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார், எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.