நம் வாழும் வீடு வெறும்,செங்கல்,மணலால் ஆனது மட்டுமல்ல. நாம் வசிக்கும் உணர்வுபூர்வமான அளவிற்கு இருக்கக்கூடியது . அதிலும் வீட்டுப் பராமரிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி வீட்டில் உள்ள அறைகளையும் பொருட்களையும் கிருமியின்றி சுத்தத்துடன் பராமரிக்கும் முறைகளைப் பாப்போம்.
சமையலறை :
சமையலறை எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க உப்பு,வினிகர்,கற்பூரம் ஆகியவற்றைத் தண்ணீரில் கலந்து சோப் ஆயில் வைத்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.இதன்மூலம் எண்ணைய் பிசுபிசுப்பு நீங்கி,அந்த இடம் பளிச்சென்று இருக்கும்.
வாஷ்பேஸினில் அடைப்பு ஏற்பட்டால் முட்டை ஓட்டை நன்றாக பொடித்து முதல் நாள் இரவு ,பேசின் ஓட்டையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் தூவ வேண்டும்.பின்பு மறுநாள் காலையில் அந்த பகுதியில் தண்ணீர் ஊற்றவும்.இதனால் அந்த ஓட்டையில் அடைந்திருக்கும் பாசி,அழுக்கு போன்றவை சுத்தமாக வெளியேறிவிடும் .
படுக்கையறை :
மர சாமன்களில் கரையான் அரிக்காமல் இருக்க ஒரு எலுமிச்சை அளவு கற்பூர கட்டியை பொடியாக்கி அரை லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பின் அந்த நீரை கட்டில் ,மேஜை போன்ற மர சாமான்கள் மீதும் ,அதன் அருகிலும் தெளித்துவிட்டால், வெகு நாட்களுக்கு கரையான் அண்டாது .
கழிப்பறை :
கழிப்பறை டைல்ஸ் இடுக்குகளிலிருக்கும் அழுக்கை நீக்க,ஒரு லிட்டர் தண்ணீரில் ,ஒரு மூடியளவு வினீகரையும், கையளவு உப்பையும் கலந்துக்கொள்ள வேண்டும்.அந்த நீரை கழிப்பறை டைல்ஸில் ஊற்றிவிட்டு ,சிறிது நேரம் கழித்து சோப்பவுடர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். டைல்ஸ் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் மாயமாக மறைந்துவிடும் .