நம்ம வீட்டில் சில மூலிகைச் செடிகளை வளர்ப்பதால் பல நோய்களை சரிசெய்யலாம் என மூலிகை மருத்துவம் கூறுகிறது.அப்படி நம் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய செடிகள்;
கொத்தமல்லி-சுவாசத்தை மேம்படுத்தும், வயிற்றுப்போக்கு, தலைசுற்றல், வலிப்பு போன்றவற்றைக் குணமாக்கும். நாம் சமையலுக்கும் பயன்படுத்தலாம்.
கருவேப்பிலை செடி – இதன்  இலையை மருந்தாக உணவாக, அழகுக்கு என பல விதங்களில் பயன்படுத்தலாம். குமட் டல்,வாந்தி,பேதி, சளி,இருமல்,பித்தம் மற்றும் வாயு பிரச்சனைகளையும் சரிசெய்யும் .
ஓமவல்லி செடி- சுவாசத்தை சீராக்கும் ,சளி, இருமல்,காய்ச்சல் போன்றவற்றைப்  போக்கும். உடல் சூட்டை தணிக்கும். இதை துளசி,இஞ்சி ,வெற்றிலை மற்றும் மிளகுடன் சேர்த்து கஷாயம் போன்று குடிக்கலாம்.
நந்திய வட்டம் – இது வாசம் குறைவான பூ. ஆனால் ,நல்ல சுவாசத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இந்த பூக்களை ஒத்தடம் கொடுக்க கண் எரிச்சல், பார்வை மந்தம் நீக்கும். அதன்  வேரை மென்று  துப்பினால் பல்வலி நீங்கும் .
நித்திய கல்யாணி – இன்றும் பல வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் செடி. இதை வெறுமனே  தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடிக்கலாம். சர்க்கரை நோய் ,உடல் பலவீனம்,பசி,அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவற்றை கட்டுப்படுத்தும் .

By sowmiya