வாய் துர்நாற்றம் என்பது ஒரு தற்காலிகமான அறிகுறி தான். வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்றினால் அது தானாகவே சரியாகி விடும்.பொதுவாக இதுபோன்ற பிரச்சினை வரக்காரணம் சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.பற்களின் இடையில் அல்லது நாவின் பின்புறம் உருவாகும் கிருமிகளே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கான முக்கிய காரணிகளாகும். இதனை போக்க சில இயற்கை வழிமுறைகளை பற்றி இங்கு பார்ப்போம்

 

  • முதலில் ½ டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பற்களைத் துலக்கிய பின் அல்லது துலக்குவதன் முன்பு தயாரித்து வைத்துள்ள நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை வாயைக் கொப்பளிக்கலாம்.

 

  • முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். பின் அந்த எண்ணெயை துப்ப வேண்டும். முக்கியமாக இச்செயலை தினமும் காலையில் பற்களைத் துலக்குவதற்கு முன் செய்ய வேண்டும். இதனால் வாய் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

 

  • முதலில் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 1/2 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரை வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும். இப்படி தினமும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் செய்ய வேண்டும்.

 

  • முதலில் அரை கப் நீரில், பேக்கிங் சோடா மற்றும் அரை கப் கற்றாழை ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தினமும் பற்களைத் துலக்கிய பின் அந்த கலவையால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் 3-4 முறை செய்து வர, வாயில் உள்ள கிருமிகள் அழிந்து, வாய் துர்நாற்றம் நீங்கும்.

 

  • ஒரு கப் நீரில் 2-3 துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் வாயைக் கொப்பளிக்கலாம்.

 

  • முதலில் ஒரு கப் நீரில் 2-3 துளிகள் பட்டை எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வாயைக் கொப்பளிக்கலாம்.

 

  • மதலில் ஒரு கப் நீரில் 1-2 துளிகள் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின் அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

 

By ADMIN