இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா – சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா.
அந்த நேரத்தில் தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார் சமந்தா. மறுபுறம் தாங்கள் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக சைத்தன்யாவும் அறிவித்தார்.
சகுந்தலம் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த சமந்தாவுக்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் குவிக்கத் தொடங்கினர்.
ரசிகர் ஒருவர், நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா? உங்களுடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள எனக்கு ரொம்ப ஆசையாக உள்ளது (Have u reproduced cuz I wanna reproduce u) என்ற சர்ச்சையான கேள்வியைக் கேட்டார்.
முதலில் ஒரு வாக்கியத்தில் ‘இனப்பெருக்கம்’ எனும் வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள் (How to use ‘reproduce’ in a sentence. Should have googled that first?) என்று பதிலடி கொடுத்தார்.