5 பிக் பாஸ் சீசன்களையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்க போவதில்லை
என அறிவித்ததை அடுத்து அடுத்த ஹோஸ்ட் யாருப்பா?

சிம்பு, பிக் பாஸ் புரமோ ஷூட்டிங்கிற்காக ரெடியாகும் புகைப்படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சொன்னதை போலவே கமல் 3 வாரங்கள் தொகுத்து வழங்கிய நிலையில், சீசன் 6 அதாவது
விஜய் டிவியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்குவேன் என்றும் தனது அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5வது சீசனை தொகுத்து வழங்க சிம்புவிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது என ஒரு தகவல் வெளியானதே, அது தற்போது உண்மையாகி உள்ளது.
நாளைக்குள் அந்த புரமோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவின் ஹோஸ்ட்டிங் ஸ்டைல் வேறமாறி இருக்கும் என்பதால், இந்த வார இறுதி நிகழ்ச்சியை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

By ADMIN